singapore tamil news

‘தலைவி’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

www.tamilmurasu.com.sg |

கங்­கனா ரணா­வத் நடிப்­பில் உரு­வா­கி­யுள்ள ‘தலைவி’ (படம்) திரைப்­ப­டத்­துக்கு தணிக்­கை­யில் ‘யு’ சான்­றி­தழ் கிடைத்­துள்­ளது. ஏ.எல். விஜய் இயக்­கி உள்ள இப்­ப­டம் ஜெய­ல­லி­தா­வின் வாழ்க்கையை மைய­மாக வைத்து எடுக்­கப்­பட்­டுள்­ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்­ளிட்ட மொழி­களில் வெளி­யிட உள்­ள­னர். ஜெய­ல­லிதா வேடத்­தில் கங்­க­னா­வும் எம்­ஜி­ஆ­ராக அர­விந்த்­சாமி­யும் நடிக்க, ஜி.வி. பிர­காஷ் இசை­ய­மைத்­துள்­ளார். கடந்த ஏப்­ரல் 23ஆம் தேதியே இப்­ப­டம் வெளி­யாகி இருக்க வேண்­டும். கொவிட் நெருக்­க­டி­யால் படம் வெளி­யா­க­வில்லை.

Source

திரைத் துளிகள்

www.tamilmurasu.com.sg |

‘பெண்களால் சாதிக்க முடியும்’ஆணாதிக்கம் என்பது எல்லா துறைகளிலும் இருக்கிறது என்றும் அது முதலில் குடும்பத்தில் இருந்துதான் வருகிறது என்றும் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.தனது குடும்பத்திலும் இத்தகைய நிலை இருந்ததாக அவர் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.“பெண் உரிமை குறித்து எல்லாரும் பேசுகிறார்கள். ஆனால் நடைமுறையில் அந்த உரிமை இல்லை. பெண்கள் சமையல் அறைக்கு உள்ளேதான் இருக்க வேண்டும் என்றும், சமையல் செய்வதுதான் அவர்கள் வேலை என்றும் சொல்வது சரியல்ல.

Source

ரஜினியை இயக்கும் தனுஷ்

www.tamilmurasu.com.sg |

‘ஜகமே தந்­தி­ரம்’ நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யா­னது அதன் நாய­கன் தனு­ஷுக்கு வருத்­தம் அளித்­தி­ருப்­ப­தாக கூறப்­பட்­டா­லும், ரசி­கர்­கள் என்­னவோ உற்சா­க­மா­கத்­தான் உள்­ள­னர். நேற்று முன்­தி­னம் முன்­னணி ‘ஓடிடி’ தளத்தில் வெளி­யி­டப்­பட்­டது ‘ஜகமே தந்­தி­ரம்’. வழக்­கம்­போல் தனுஷ் ரசிகர்­க­ளி­டம் இருந்து பலத்த வர­வேற்பு கிடைத்­துள்­ளது.இந்­நி­லை­யில், இயக்­கு­நர் கார்த்­திக் சுப்­பு­ரா­ஜு­டன் பணி­யாற்­றிய ஒவ்­வொரு தரு­ணத்­தை­யும் தாம் மிக­வும் நேசித்­த­தாக கூறி­யுள்­ளார் தனுஷ்.

Source

திரைத் துளி­கள்

www.tamilmurasu.com.sg |

மீண்டும் இணைந்த நட்சத்திர ஜோடிவிவாகரத்து பெற்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ரஞ்சித்தும் நடிகை பிரியா ராமனும் திருமண நாளன்று சந்தித்துள்ளனர். அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.‘நேசம் புதுசு’ திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

Source

திரைத் துளிகள்

www.tamilmurasu.com.sg |

விஜய் தரப்பு அளித்த விளக்கம்தனது மகனும் மகளும் சமூக வலைத்தளங்களில் தனிப்பக்கங்களை வைத்திருக்கவில்லை என்றும் அவர்கள் பெயரில் இயங்கும் கணக்குகள் அனைத்தும் போலியானவை என்றும் நடிகர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source

11 தோற்றங்களில் யோகி பாபு

www.tamilmurasu.com.sg |

யோகி பாபு நடிப்­பில் சுமார் 20 படங்­கள் உரு­வாகி வரு­கின்­றன. இந்­நி­லை­யில் ‘காவி ஆவி நடு­வுல தேவி’ என்ற படத்­தில் இவர் 11 தோற்­றங்­களில் அசத்த உள்­ளார்.வி.சி.குக­நா­தன் கதை­யில் புகழ்­மணி இயக்­கத்­தில் உரு­வா­கிறது இந்­தப் படம். தம்பி ராமையா, மொட்டை ராஜேந்­தி­ரன், இமான் அண்­ணாச்சி ஆகிய மூவ­ரும் யோகி­யு­டன் இணைந்து ரசி­கர்­களை வயிறு குலுங்க சிரிக்க வைக்­கப் போவ­தா­கச் சொல்­கி­றார் இயக்­கு­நர்.“ஒவ்வொரு காட்சியும் சிரிக்க வைக்கும். இந்­தப் படத்­தில் ராம் சுந்­தர் நாய­க­னாக அறி­மு­க­மா­கி­றார். இவ­ருக்கு ஜோடி­யாக பிரி­யங்கா நடிக்­கி­றார்.

Source

அடிதடி நிறைந்த படம் ‘பொன் மாணிக்கவேல்’

www.tamilmurasu.com.sg |

இந்­தித் திரை­யு­ல­கில் பர­ப­ரப்­பாக இயங்கி வரு­கி­றார் பிர­பு­தேவா. அங்கு முன்­ன­ணி­யில் உள்ள இயக்கு­நர்­களில் அவ­ரும் ஒரு­வர். அதே­ச­ம­யம் தமிழ்ப் படங்­களில் நடிப்­ப­தி­லும் கவ­னம் செலுத்­து­கிறார் பிர­பு­தேவா. தற்­போது ஏ.சி. முகில் இயக்­கத்­தில் இவர் நடித்து முடித்­துள்ள ‘பொன் மாணிக்­க­வேல்’ படம் வெளி­யீடு காணத் தயா­ராக உள்­ளது.

Source

மகன் முகெனின் காதல் கைகூட உதவும் தந்தை பிரபு: ‘வேலன்’ படத்தில் சுவாரசியம்

www.tamilmurasu.com.sg |

‘பிக்­பாஸ்’ நிகழ்ச்­சி­யில் பெற்ற வெற்­றி­யின் மூலம் பிர­ப­ல­மான முகென்­ராவ் தமி­ழில் சில படங்­களில் ஒப்­பந்­த­மாகி உள்­ளார். அவற்­றுள் முத­லில் திரைக்கு வரு­கிறது ‘வேலன்’. அறி­முக இயக்­கு­நர் கவின் இயக்­கி­யுள்ள இப்­ப­டத்­தில் பிரபு, சூரி, தம்பி ராமையா உள்­ளிட்­டோர் நடித்­துள்­ள­னர். முகென் ஜோடி­யாக மீனாட்சி நடித்­துள்­ளார். இவர் ஏற்­கெ­னவே ‘கென்­னடி கிளப்’ படத்­தில் நடித்­த­வர்.தந்தை தமது பகை­யில் வெற்றி பெற வேண்­டும் என்­ப­தற்­காக, தனது காத­லி­யையே இழக்­கத் துணி­கி­றான் கதா­நா­ய­கன். மக­னு­டைய காதல் கைகூட பகை­யா­ளி­யி­டம் தோற்­றுப் போக தயா­ரா­கி­றார் தந்தை.

Source

திரையரங்கில்தான் கீர்த்தியின் ‘குட்லக் சகி’

www.tamilmurasu.com.sg |

கீர்த்தி சுரேஷ் நடித்­தி­ருக்­கும் ‘குட்­லக் சகி’ திரைப்­ப­டம் ‘ஜீ 5’ தளத்­தில் வெளி­யா­கும் என்ற செய்தி சமூக வலைத்­த­ளங்­களில் பர­வி­யது. அதிர்ச்சி அடைந்த படத்­தின் தயா­ரிப்­பா­ளர் கொரோனா ஊர­டங்­கிற்­குப் பிறகு திரை­ய­ரங்­கில்­தான் படம் வெளி­யா­கும் என்று மறுப்பு தெரி­வித்து இருக்­கி­றார். இது­பற்றி தயா­ரிப்­பா­ளர் சுதிர் சந்­திர பத்ரி கூறு­கை­யில், “குட்­லக் சகி படத்­தில் கீர்த்தி சுரேஷ், ஆதி, ஜெக­பதி ­பாபு ஆகி­யோர்

Source

தந்தையும் மகனும் இணையும் ‘சீயான் 60’

www.tamilmurasu.com.sg |

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் ‘சீயான் 60’. இந்தப் படத்தில் விக்ரமும் அவர் மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர்.இந்தப் படத்தில் விக்ரம் முழு நேர வில்லனாகவும் துருவ் விக்ரம் நாயகனாகவும் நடிக்கிறார்கள். இதுவரை ‘சீயான் 60’ படத்தின் 50 விழுக்காட்டு படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் எஞ்சியுள்ள படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

Source

error:
Scroll to Top