master movie

மூன்றே நாட்களில் ரூ.100 கோடி?!… வசூலை குவிக்கும் விஜய்யின் `மாஸ்டர்'!

www.puthiyathalaimurai.com |

’மாநகரம்’, ’கைதி’ வெற்றிகளைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த, ‘மாஸ்டர்’ திரைப்படம், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வெளியிடப்படவில்லை. திரையரங்குகளில்தான் வெளியிடப்படும் என படக்குழு உறுதியாக அறிவித்தது. பொதுமுடக்கத் தளர்வுகளைத் தொடர்ந்து பொங்கலையொட்டி வெளியானது மாஸ்டர் திரைப்படம். விஜய் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை திரையரங்குகளில் கண்டு வருகின்றனர். 50 சதவீத இருக்கைகளில் ரசிகர்கள் அமர வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வெளியானாலும் விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். கடந்த 9 மாதங்களாகக் காத்திருந்த ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து உற்சாகத்துடன் படம் பார்த்து வருகின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் முதல் நாள் தமிழகத்தில் ரூ .26 கோடியை வசூலித்தது. தயாரிப்பாளர்கள் அதை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்போது, சமீபத்திய தகவல் என்னவென்றால், மாஸ்டர் 3 நாட்களில் தமிழகத்தில் ரூ.50 கோடியை எட்டியுள்ளது என்பதுதான். பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் படம் வெளியாகிய நிலையில் இவ்வளவு பெரிய வசூல் ஆகியிருப்பது தியேட்டர் அதிபர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், படக்குழு மத்தியில் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக திரையரங்க ‌உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், “‘மாஸ்டர்’ மாநிலம் முழுவதும் நிரம்பிய காட்சிகளுடன் 5 ஆம் நாள் ரூ .100 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் அனைத்து இடங்களிலும் அனைத்து தியேட்டர்களிலும் வெளியாகியுள்ளது மற்றும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால் விநியோகஸ்தர்கள் உற்சாகமாக உள்ளனர். மேலும் ‘மாஸ்டர்’ இன்னும் ஒரு வாரத்தில் லாபத்தை எட்டும்” என்று தெரிவித்துள்ளதாக Times of india செய்தி வெளியிட்டுள்ளது. இதேபோல் மற்றொரு முன்னணி ஊடகமான Indian express மாஸ்டர் மூன்றே நாளில் ரூ.100 கோடி வருமானம் பார்த்துள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது. கவுசிக் என்பவரின் டுவீட்டை மேற்கோள்கட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஆனால் உண்மை தன்மை குறித்து படத்தின் தயாரிப்பாளர்கள் தரப்பு கூறினால்தான் தெரியவரும். ஒருவேளை மாஸ்டர் ரூ.100 கோடி வசூலித்தால் விஜய் நடிப்பில் ரூ.100 கோடி வசூலித்த 8வது படம் இதுவாக இருக்கும். கலவையான விமர்சனங்களை பெற்று மாஸ்டர் படம் தியேட்டர்களில் வரவேற்பை பெற்று வருகிறது. எது எப்படியானாலும் படத்தின் வசூல் அனைத்து தரப்பினர் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இன்னும் சில தினங்கள் விடுமுறை என்பதால் படம் லாபம் வசூலிக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதற்கிடையே, மாஸ்டர் இந்தியில் ரீமேக் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source

மாஸ்டர் திரைப்படம் பாதியில் நிறுத்தம் – விஜய் ரசிகர்கள் விரக்தி– News18 Tamil

tamil.news18.com |

மாஸ்டர் திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டதால் விஜய் ரசிகர்கள் விரக்தியடைந்தனர்.

Source

மாஸ் காட்டிய ’ஜே.டி Vs பவானி’ – பொங்கல் ட்ரீட் ‘மாஸ்டர்’ பட விமர்சனம்

www.puthiyathalaimurai.com |

தமிழ் சினிமாவில் இரண்டு பெரிய நாயகர்கள் இணைந்து நடிப்பது இப்போது எல்லாம் அபூர்வமாகிவிட்டது. அப்படி நடித்தாலும் அதில் ஒரு கதாநாயகனுக்கே அதிகளவு கவனம் இருக்கப்படும்விதமாக படமாக்கப்படுவதையும் நீங்கள் கவனித்திருக்கலாம். பாலிவுட்டில் நான்கைந்து நாயகர்கள் கூட சேர்ந்து நடிப்பதும், எல்லோருக்கும் சமமான வாய்ப்பு அதில் கிடைப்பதும் நாம் கவனிக்கவேண்டிய ஒன்று. அந்தவகையில் மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய ஒரு அடியை எடுத்துவைத்திருக்கிறது தமிழ் சினிமாவில். அதற்காக மொத்த குழுவினருக்கும் குறிப்பாக நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய பாராட்டை தெரிவித்துக்கொண்டு வாருங்கள் மாஸ்டர் திரைப்படத்தை அலசலாம். நாகர்கோவிலில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருக்கும் இளம் குற்றவாளிகளை தான் செய்யும் தவறுகளுக்கு கேடயமாக உபயோகித்துக் கொள்ளும் பவானி என்கிற வில்லனை அடக்க, சென்னையில் பகல் எல்லாம் கல்லூரியில் மாணவர்களுக்கு நல்வழியை கற்பித்துவிட்டு, தனிப்பட்ட சோகங்கள் காரணமாக இரவெல்லாம் போதையில் மிதக்கும் ஜேடி என்கிற ஆசிரியர் வருகிறார். இதுதான் மாஸ்டர் படத்தின் கதை. எளிமையான இந்த கதைக்கு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதைதான் இங்கே நாம் அலசப்போவது. மாநகரம் மற்றும் கைதி ஆகிய இரண்டு படங்களின் மூலம் தனக்கென தனி அடையாளத்தையும், ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்திக்கொண்ட லோகேஷ் கனகராஜ் என்கிற இளைஞர் இந்தப்படத்தில் எதிர்கொண்டிருக்கும் முதல் சவால் விஜய் என்கிற மிகப்பெரிய மாஸ் ஹீரோ. விஜய் போன்ற ஒரு நடிகருக்கு திரைக்கதை எழுதுகையில் கொண்டாட்ட மனநிலை ஒன்று வேண்டும். ஏனெனில் நாம் சாதாரணமாக அணுகும் கமெர்ஷியல் படங்களுக்கு பின்னால் இருக்கும் திரைக்கதை உழைப்பு மிக பலமாய் இருத்தல் அவசியம். அரைச்ச மாவை அரைக்கும் வகையறா திரைக்கதைகள் இங்கே உடனே புறந்தள்ளப்படும். அந்தவகையில் லோகேஷ் முக்கால்வாசி கிணறு தாண்டியிருப்பதாகவே சொல்லலாம்.  அதற்கு முதல் காரணம் கேரக்டர் ஸ்கெட்ச் எனப்படும் பாத்திர குணாதிசயங்களை மிகத்தெளிவாக முதல் அரைமணி நேரத்திற்குள் நமக்கு சொல்லிவிடுகிறார். பவானியாக நடித்திருக்கும் விஜய்சேதுபதியின் பின்னணி என்ன? அவர் எதனால் கெட்டவனாக மாறினார்? அவரது உடல்மொழி எப்படிப்பட்டது? அவர் தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எப்படி கையாளுவார் என்பதை எல்லாம் தெளிந்த நீரோடை போல விளக்கிவிடுகிறார். அதனால் உடனடியாக நாம் பவானி பாத்திரத்தோடு ஒன்றிவிடுகிறோம். அதேதான் நாயகன் விஜய்க்கும். இதுவரை திரையில் நாம் கண்டிராத விஜயை இதில் காண்கிறோம். ஒருபக்கம் எப்போது பார்த்தாலும் போதையில் இருந்தாலும் கூட ஒரு பலத்த உற்சாகம் கொண்ட கதாபாத்திரமாக ஜேடி கதாபாத்திரம் உலாவருகிறது. விஜய் ரஜினியை பின்பற்றி அவரே நகைச்சுவை காட்சிகளில் நடிப்பதை கண்டிருக்கிறோம். அதன் இன்னொரு பரிணாமமாக இதில் வருகிறார். அந்த காட்சிகள் எல்லாமே சிரிப்பொலியால் அரங்கை நிறைக்கிறது. விஜய் படங்களில் கதாநாயகன் அறிமுகப்பாடல்கள் மிகப்பிரசித்தி பெற்றவை. இந்தப்படத்தில் பாடலாக இல்லாமல் “வாத்தி கமிங்” என்கிற இசை மட்டுமே ஒலிக்கிறது. அதற்கு மிகவும் ரசிக்கும்படியாக நடனம் அமைத்தது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. இப்படியாக இதற்குமுன்னால் காணாத ஒரு விஜயை காண்பதே மிகப்பெரிய ஆசுவாசமாக இருப்பதை நாம் உணரலாம். படத்தின் முதல் பகுதி முழுக்கவும் இப்படி ஆச்சரியங்கள் கொட்டிக்கிடக்கின்றன. குறிப்பாக இடைவேளையை நோக்கி படம் நகருகையில் ஒரு பெரும் பதைபதைப்பை இயக்குனர் உண்டாக்கி இருக்கிறார். அதற்கு முத்தாய்ப்பாக விஜய் துப்பாக்கி மற்றும் கத்தி திரைப்படங்களில் இடைவேளை காட்சியின்போது சொன்ன “ஐ ஆம் வெயிட்டிங்” என்கிற புகழ்பெற்ற வசனத்தை இந்தப்படத்தில் விஜய்சேதுபதி சொல்கிறார். உண்மையில் மாஸ் பட ரசிகர்களுக்கு அந்த இடைவேளைக்கு முந்தையை 25 நிமிட காட்சிகள் அட்டகாசமான விருந்து. ஆனால் இரண்டாம் பகுதியோ முதல் பகுதிக்கு முற்றிலும் எதிர்மாறாக இருப்பதுதான் இங்கே கவலைக்குரியது. சற்று ஏமாற்றமாக இருந்தது என்றுமே கூட இதைச் சொல்லலாம். முதல் பகுதியில் அவ்வளவு அற்புதமாக, புதியதாக இருந்த காட்சிகளுக்கு மாறாக, இரண்டாம் பகுதி முழுதும் ஏற்கனவே பல மசாலா படங்களில் நாம் கண்ட காட்சிகளே வருகின்றன. அத்தனை வலிமையான பவானி கதாபாத்திரத்தை எதிர்க்கும் ஜேடி என்கிற கல்லூரி ஆசிரியர் வெறுமனே தன் அதிரடி சண்டைகளால் மட்டுமே வில்லனை சமாளிக்கிறார். அதுவும் பவானியின் நடவடிக்கைகளுக்கு எதிர்வினை மட்டுமே புரிகிறார். அவராக எதுவுமே செய்வதில்லை. இதுவே இரண்டாம் பாதியின் பின்னடைவுக்கு மிகமுக்கிய காரணம். விஜய் தனது வசீகரமான உடல்மொழி மூலம் இந்த முறையும் நம்மை கவர தவறவில்லை. படத்தில் இரண்டு பெரிய சோகக் காட்சிகள் உண்டு. அந்த காட்சிகளில் விஜயின் நடிப்பு பிரமாதமாக இருப்பதை யாராலும் மறுக்க இயலாது. ஏனெனில் படத்தின் நாயகன் வேதனைப்படுகையில் பார்ப்பவர் மனநிலையும் அவ்வேதனையை அனுபவித்தலே சிறந்த ஒரு சினிமா அனுபவம் கொடுக்கும். அதை விஜய் சந்தேகம் இன்றி அளித்திருக்கிறார். ஆனால் படத்தில் விஜயை விட ஒருபடி மேலே ஜொலிப்பது என்னவோ பவானியாக வரும் விஜய்சேதுபதிதான். இதற்கு முன்பு விக்ரம் வேதாவில் இதேபோன்றதொரு விஜய்சேதுபதி காணக்கிடைத்தார். சற்றே கிண்டலாக அவர் பேசும் வசனங்களும், அதற்கேற்ற கச்சிதமான உடல்மொழியும் பவானி பாத்திரத்தை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்கிறது. என்னதான் விஜய்சேதுபதி மற்ற படங்களில் இப்போது கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்தாலும் கூட, அதற்காக எல்லாம் எந்தவித சமரசமும் இல்லாமல் “வில்லன்னா வில்லன்தான்” என்பது போல நடித்திருப்பது எனக்குத் தெரிந்து இன்றைய நடிகர்கள் யாரும் செய்யத்துணியாத ஒன்று. வரவேற்கவேண்டிய விஷயம் இது. லோகேஷ் கனகராஜ் தன்னால் இயன்ற அளவு மிகவும் புத்துணர்ச்சியான ஒரு படம் தர விழைந்திருக்கிறார். அது காட்சிக்கு காட்சி தெரிகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் ஆக்ஷன் காட்சிகளின் நீளம் அதற்கு ஒத்துழைக்கவில்லை. குறிப்பாக அந்த லாரி சண்டை காட்சி. படத்தில் சற்றும் ஒட்டாத ஒரு விஷயமாக அது தெரிவதை நீங்கள் படம் பார்க்கும்போது உணரலாம். ஆனால் அதைமீறி சின்ன சின்ன விஷயங்களில் லோகேஷ் ஈர்க்கவே செய்கிறார். குறிப்பாக பழைய பாடல்களை அவர் பயன்படுத்தியிருக்கும் விதம். “கருத்தமச்சான் கன்னத்துல எதுக்கு வச்சான்..” பாடலும், “வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி” என்கிற க்ளைமாக்சில் விஜய் பாடி ஆடும் பாடலும் லோகேஷின் முத்திரை என்றே சொல்லலாம். அவரது கைதி படத்திலும் கூட இப்படி அவர் உபயோகப்படுத்தி இருக்கிறார் என்பதை நினைவு கொள்ளுங்கள். இதற்கு முன்பு லோகேஷ் எடுத்த இரண்டு படங்களுமே ஒரே நாளில் நடப்பது போன்ற கதையம்சம் கொண்டவை. முதன்முறையாக அதைவிட்டு வெளியில் வந்து ஒரு படம் செய்திருக்கிறார். அதுபோக ஐந்து பாடல்களும் இதில் உண்டு. அதையெல்லாம் கையாண்ட விதத்தில் அங்கே இங்கே சில சறுக்கல்கள் இருந்தாலும் கூட நல்ல தொழில்நுட்ப குழு ஒன்று அமைந்திருப்பதால் படம் எங்கேயும் அலுப்புத்தட்டவில்லை. குறிப்பாக அனிருத் தனது இசையின் மூலம் மிகப்பெரிய உற்சாகத்தை படம் முழுக்க தந்துகொண்டே இருப்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒரு கபடி போட்டி ஒன்று படத்தில் இருக்கிறது. அதற்கு பொருத்தமாக விஜய் நடித்த கில்லி படத்தின் தீம் இசையை உபயோகித்திருப்பது குழுவின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. அந்த காட்சிகளில் எல்லாமே பொறிபறக்கிறது. ஆனால் சாந்தனு, ஆன்ட்ரியா, நாசர், ஸ்ரீமன், சஞ்சீவ், கௌரி என பல நடிகர்கள் படத்தில் இருந்தாலும் கூட எல்லோரும் ஏதோ செட் ப்ராப்பர்டிகள் போல வந்துபோவது கவலைக்குரியதே. ஏனெனில் அவர்களை திரையில் காண்பிக்கையில் நமக்குள் ஏற்படும் எதிர்பார்ப்புகள் எதற்கும் படத்தில் நியாயம் செய்யப்படவில்லை. யார் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம் என்கிற அளவில்தான் அந்த பாத்திரங்கள் இருக்கின்றன. லோகேஷ் இதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஆனால் ஆச்சர்யபப்டும் விதமாக அர்ஜுன் தாஸ், மகேந்திரன் போன்றவர்களின் நடிப்பு மெச்சும்படியாக இருந்தது. ஒரு பொங்கலன்று திரையரங்கிற்கு சென்று பார்க்கக்கூடிய வகையிலான ஒரு படமாகவே மாஸ்டர் இருக்கிறது. இரண்டாம் பகுதியின் குறைகளை சற்றே களைந்திருந்தால் எல்லாவகையான ரசிகர்களுக்கும் பெரும் விருந்தாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. திரையரங்கில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியோடு கண்டுகளியுங்கள். – பால கணேசன்

Source

Master Movie Release Live: ரசிகர்கள் மீது விஜய் வைத்த நம்பிக்கை

tamil.indianexpress.com |

master movie release live updates: மாஸ்டர் படத்தின் சில காட்சிகள் திருட்டுத்தனமாக இணையதளத்தில் திங்கட்கிழமை லீக் ஆனது. அவற்றை ரசிகர்கள் பகிர வேண்டாம்…

Source

‘மாஸ்டர்’ படத்தை இணையத்தில் வெளியிட்ட நபர் சிக்கினார்– News18 Tamil

tamil.news18.com |

‘மாஸ்டர்’ படத்தை இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட நபரை படக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். The person who posted the master movie on the internet was caught

Source

விஜய்யின் ‘மாஸ்டர்‘ படம் பின்வாங்குமா?

www.puthiyathalaimurai.com |

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் “மாஸ்டர்”. கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய இந்தப்படம் தற்போது பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்துடன் இயக்குநர் சுசிந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் படமும் வெளியாக இருக்கிறது. முன்னதாக 50 சதவீத பார்வைகளுக்கு மட்டுமே திரையரங்குகளில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், நடிகர்கள் விஜய் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் முதல்வரிடம் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து முதல்வரும் திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க உத்தரவிட்டார். இதற்கு மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதித்திருப்பது விதி மீறல் என மத்திய அரசும் கூறியது. இந்நிலையில் மாஸ்டர் படமானது 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையிடப்படுமா? ஒரு வேளை 50 சதவீத பார்வையாளர்களுடன் மாஸ்டர் திரையிடப்பட்டால் படத்திற்கு கிடைக்கு வருமானம் எந்த வகையில் தடைப்படும், திரையரங்கு உரிமையாளர்கள் மாஸ்டர் படத்திற்கு அதிக வரவேற்பு அளிப்பது ஏன் என்பது தொடர்பான கேள்விகளை நியூஸ் டுடே பத்திரிகையாளர் பரத்திடம் முன்வைத்தோம். மாஸ்டர் படத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள் அதிக வரவேற்பு அளிப்பதற்கான காரணம் என்ன? மாஸ்டர் படமானது ஒரு உச்ச நட்சத்திரத்தின் திரைப்படம். கொரோனா ஊரடங்கு காலத்தில் சினிமாவில் ஓடிடியின் ஆதிக்கமானது அதிகமானது. அதனைத்தொடர்ந்து திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்தபோதும் திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையானது மிகக் குறைவாகவே இருந்தது. இதனால் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் மக்களின் பழக்கமானது நசுங்கிப் போனதோ என்ற ஐயம் இருக்கிறது. ஆகவே விஜய் போன்ற நடிகரின் படம் திரையரங்கில் வெளியாகும்போது, மீண்டும் மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள் என திரையரங்கு உரிமையாளர்கள் நம்புகின்றனர். மற்றொரு காரணம் படத்தின் வசூலானது எதிர்பார்ப்பதை விட அதிகமாக கிடைக்கும் என்பது. அரசு ஒருவேளை 100 சதவீத பார்வையாளர்களை கொடுத்த அனுமதியை திரும்பப் பெற்றால், மாஸ்டர் படம் வெளியாக வாய்ப்பிருக்கிறதா? மாஸ்டர் படமானது ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டியத் திரைப்படம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக அதன் வெளியீடு தள்ளிச் சென்று இந்தக் காலத்தை எட்டியிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், இந்தக் காலமானது பொங்கல் விடுமுறை காலம். ஆகையால் மாஸ்டர் பட வெளியீட்டிற்கு இதை விட சிறப்பான காலம், வேறு எப்போது கிடைக்கும் என்பது தெரியாது. மாஸ்டர் படக்குழுவும் கிட்டத்தட்ட பட வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது. ஆகையால் அரசு 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுத்தாலும் மாஸ்டர் படமானது திரையரங்கில் வெளியாகி விடும் என்பதே என்னுடைய கருத்து. அப்படி 50 சதவீத பார்வையாளர்களுக்கு, அரசு அனுமதி கொடுக்கும் பட்சத்தில், திரையரங்கு உரிமையாளர்கள் காட்சிகளை அதிகரிக்கவும், அதிகாலை மற்றும் நள்ளிரவு காட்சிகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைப்பார்கள். அந்த கோரிக்கைகள் மூலம் மாஸ்டர் படத்திற்கான முழு வசூலை, 50 சதவீத பார்வையாளர்கள் வைத்துக்கொண்டே திரையரங்கு உரிமையாளர்கள் பெற முயற்சிப்பர். எப்படி இருப்பினும் சாதரண காலங்களில் விஜய் படங்களுக்கு கிடைக்கும் வசூலானது, இந்தப் படத்தில் கிடைப்பது சந்தேகம்.  மாஸ்டருடன் ஈஸ்வரன் படமும் வெளியாகும்போது, இரு படங்களுக்கும் திரையரங்கு ஒதுக்கீடு எப்படி இருக்கும்? மாஸ்டர் படம் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும்போது , 90 முதல் 95 சதவீதம் வரையிலான திரையரங்குகளில் வெளியாகும். ஜனவரி 14 ஆம் தேதி மாஸ்டருடன்  ஈஸ்வரன் படம் வெளியாகும் பட்சத்தில் 70/30 கணக்கில் திரையரங்குகள் ஒதுக்கப்படும்.” என்றார்

Source

''50% இருக்கைகள் என்றால் 'மாஸ்டர்' மட்டுமே வெளியீடு'' – திரையரங்க உரிமையாளர் சங்கம்

www.puthiyathalaimurai.com |

100% ரசிகர்கள் அனுமதி என்ற உத்தரவை அரசு திரும்பப் பெற்றால் மாஸ்டர் படம் மட்டுமே வெளியிடப்படும் என திரையரங்க உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது தீபாவளி, பொங்கல் என்றால் திரையரங்குகள் திருவிழாவாக மாறும். புதுப்படங்கள், ஆட்டம், பாட்டமென களைக்கட்டும். ஆனால் கடந்த தீபாவளி அப்படியாக இருக்கவில்லை. காரணம் கொரோனா. கொரோனா காரணமாக பல மாதங்களாக மூடப்பட்ட திரையரங்குகள் தீபாவளி நேரத்தில் தான் 50% பார்வையாளர்கள் என்ற அறிவிப்புடன் திறக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பின் பெரிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அடுத்து மாஸ்டர், ஈஸ்வரன் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படியே இரு படங்களும் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டுமென விஜய், சிம்பு கோரிக்கை விடுத்தனர். அதன்படியே 100 இருக்கைகளுக்கு அரசு அனுமதி கொடுத்தது. ஆனால் மறுபுறம் அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு குரல்கள் கிளம்பின. மூடிய அரங்கு என்பதால் இது ஆபத்தானது, கொரோனா எளிதில் பரவும் என பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே அரசு தன்னுடைய நிலையில் மாற்றம் கொண்டுவரும் என தெரிகிறது. 100% இருக்கை தொடர்பான விவகாரத்துக்கு முதல்வருடன் பேசி முடிவுஎடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். இந்நிலையில் 100% ரசிகர்கள் அனுமதி என்ற உத்தரவை அரசு திரும்பப் பெற்றால் மாஸ்டர் படம் மட்டுமே வெளியிடப்படும் என திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்ரமணியன், தெரிவித்துள்ளார். ஒருவேளை மாஸ்டர் படம் வெளியாவது தள்ளிப்போனால் மட்டுமே ஈஸ்வரன் வெளியிட முடியும் என்றும் அவர் கூறினார். இதுஒருபுறம் இருக்க, 50% இருக்கைகளாக குறைக்கப்பட்டாலும் ஈஸ்வரன் வெளியாகும் எனவும் பொங்கல் பண்டிகையை மனதில் வைத்தே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்படக்குழு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source

வெளியானது ‘மாஸ்டர்’ படத்தின் புதிய போஸ்டர்கள் – குஷியில் விஜய் ரசிகர்கள்

www.puthiyathalaimurai.com |

மாஸ்டர் படத்தின் புதியப் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கொரோனா பெருந்தொற்றினால் திரை அரங்குகள் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்டன. அதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாக வேண்டிய மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. சூர்யாவின் சூரரைப் போற்று ஓடிடியில் வெளியான நிலையில், மாஸ்டர் படமும் ஓடிடியில் வெளியாகுமா எனற கேள்வி எழுந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனமோ மாஸ்டர் படத்தை திரையரங்கிலே வெளியிட விருப்பம் தெரிவித்தது. இந்நிலையில் ஜனவரி 13 ஆம் தேதி மாஸ்டர் படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வந்த நிலையில், தற்போது மாஸ்டர் படத்திலிருந்து புதியப்போஸ்டர்களை தயாரிப்பு நிறுவனம் அதனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. 2020, signing off with exclusive posters of #Master ? pic.twitter.com/VP7e3Jst8r — XB Film Creators (@XBFilmCreators) December 30, 2020

Source

Master teaser: Vijay promises an action-packed entertainer

indianexpress.com | The teaser of a lot awaited film Grasp, starring Vijay and Vijay Sethupathi, was launched on Saturday, coinciding with the Diwali competition. A glimpse of Grasp has been lengthy overdue because the filmmakers had been reluctant to chop a teaser in the course of the …

Source

மிரட்டல் போஸ்டர் உடன் வெளியானது 'மாஸ்டர்' அப்டேட்… கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

www.puthiyathalaimurai.com |

மாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு குறித்த தகவலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தில் விஜய்க்கு இணையாக விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. முதலில் ஏப்ரல் 11-ம் தேதி மாஸ்டர் வெளியாகும் என்றே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக வெளியீடு தள்ளிப்போனது. சுமார் 7 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், தற்போது தான் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக 50 சதவீத இருக்கைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதால் மாஸ்டர் ரிலீஸை பொங்கலுக்கு ஒத்திவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், மாஸ்டர் படம் குறித்த அப்டேட் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் விஜய் ரசிகர்கள் அப்டேட் எங்கே என சமூக வலைதளங்களிலும் ஹேஷ்டேக் போட்டு ட்ரெண்ட் செய்தனர். அதுவும், லோகஷ் கனகராஜ் அடுத்து இயக்கவுள்ள கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் அப்டேட்களே அடுத்தது வெளியாகின. ஆனால், ‘மாஸ்டர்’ அப்டேட் வரவேயில்லை என ரசிகர்கள் ஏக்கத்தில் இருந்தனர்.   இந்நிலையில், ‘மாஸ்டர்’ படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றினை படத்தயாரிப்பு நிறுவனமும், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் நவம்பர் 14ம் தேதி, அதாவது தீபாவளி அன்று மாலை 6 மணியளவில் வெளியாகும் என்பதுதான் அந்த அப்டேட். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். Thank you all for the patience and support! ? pic.twitter.com/qjcUtxYH0P — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 12, 2020 இந்தத் தகவலுடன் விஜய் – விஜய்சேதுபதி இணைந்துள்ள போஸ்டர் ஒன்றினையும் லோகேஷ் வெளியிட்டுள்ளார். அதில், விஜய் சேதுபதியின் பின்னால் நின்று கொண்டிருக்கும் விஜய், அவரின் (விஜய் சேதுபதி) தோளில் தனது கையை வைக்கிறார். விஜய் சேதுபதியும் விஜய் தொடவுள்ளதை திரும்பி பார்க்கிறார். இது பார்ப்பதற்கு மிகவும் மாஸாக உள்ளதாக ரசிகர்கள் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.

Source

error:
Scroll to Top