அனுராக் மீது #MeToo புகார்: முன்னாள் மனைவி எதிர்ப்பு!

www.puthiyathalaimurai.com |

அனுராக் காஷ்யப் மீதான #MeToo புகாருக்கு எதிராக அவரது முன்னாள் மனைவி குரல் கொடுத்துள்ளார்.   பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறி மிகவும் மோசமான முறையில் நடந்தார் என்றும், பிரதமர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகை பாயல் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 19-ம் தேதி குற்றம்சாட்டியிருந்தார்.     இந்த புகாருக்கு அனுராக் காஷ்யப் மறுப்பு தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, அனுராக் காஷ்யப்பின் முன்னாள் மனைவியான கல்கி கொச்சிலின் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டார். தற்போது அனுராக் மீதான மீடூ புகாருக்கு எதிராக வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:   “அன்பார்ந்த அனுராக். இந்த சமூக ஊடகக் கூத்து உங்களைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் திரைக்கதைகளில், பெண்களின் விடுதலைக்காகப் போராடியிருக்கிறீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில்முறை வாழ்க்கையிலும் அவர்களின் நேர்மைக்காகக் குரல் கொடுத்திருக்கிறீர்கள். இவற்றுக்கு நான் சாட்சியாக இருந்திருக்கிறேன்.   தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழிலிலும் என்னை உங்களுக்குச் சரிசமமாகத்தான் பார்த்திருக்கிறீர்கள். நமது விவாகரத்துக்குப் பிறகும் எனது கண்ணியத்துக்காகத் துணை நின்றீர்கள். நாம் ஒன்று சேரும் முன்னரே ஒரு பணிச் சூழலில் நான் பாதுகாப்பின்றி உணர்ந்தபோது என்னை நீங்கள் ஆதரித்தீர்கள்.   யாரும், யாரையும் அவதூறு பேசும், வினோத காலகட்டம் இது. விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஆபத்தான, அருவருப்பான செயலாகும்.   வலிமையாக இருங்கள். நீங்கள் செய்து வரும் வேலையைத் தொடருங்கள்’’ என்று கல்கி கொச்சிலின் தெரிவித்துள்ளார்.

Source

Related
விஜய்யை ஒரே வார்த்தையில் பாராட்டிய ஷாரூக்கான்- Dinamalar
கிரிக்கெட் வீரரை கரம் பிடிக்கும் இயக்குனர் ஷங்கர் மகள்- Dinamalar
தளபதி விஜயின் மதுர படத்தின் ஹீரோயினா இவங்க? ஆளே அடையாளம் தெரியல!
கவர்ச்சியாக படம் எடுத்து பரவவிடும் நடிகை
புகழ் பெற்ற ‘பாப்’ பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், கோர்ட்டில் கண்ணீர்
விஜய்யின் பீஸ்ட் போஸ்டர் அதிக லைக்குகள் சாதனை | Beast FL got more likes
மலையாள பாடலாசிரியர் பூவாசல் காதர் காலமானார்- Dinamalar
டாப்ஸி பட இயக்குனர் விலகல்- Dinamalar
எத்தனை கோடி கொடுத்தாலும் முடியவே... முடியாது..! தன் முடிவில் உறுதியாக இருக்கும் பிரபாஸ்..!
Thalapathy Vijay: ஏ.ஆர்.முருகதாஸின் துப்பாக்கி 2-ல் விஜய் இல்லையா?
எகிறிய எம்எஸ்வி.. படாரென கதவு திறந்த கண்ணதாசன்.. "சொன்னது நீதானா".. காலத்தை வென்ற இரு காவியங்கள்!
Kamal Haasan: மூளை புற்றுநோயுடன் போராடும் ரசிகர் - வீடியோ கால் செய்து நம்பிக்கையூட்டிய கமல்!
தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் குறித்து வெளியான புதிய அப்டேட், எப்போது ரிலீஸ் தெரியுமா? - சினிஉலகம்
‘தலைவி’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்
டேக் முடிந்த பின்னும் கதறி அழுத சிம்பு: மாநாடு திரைப்படம் குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்!
அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்கப் போகிறாரா தனுஷ்?- Dinamalar
ரசிகரை நெகிழ வைத்த கமல்- Dinamalar
சூர்யா - சிவா கூட்டணி படம் உறுதி- Dinamalar
விஜய்யை வைத்து ஜேம்ஸ்பாண்ட் படம் - மிஷ்கின் ஆசை- Dinamalar
எங்களுக்கு திருமணம் நடக்கவில்லை: அஸ்வின், சிவாங்கி விளக்கம்- Dinamalar
விஜய்யின் Beast படத்தின் ஃபஸ்ட் லுக் செம ரீச்- சந்தோஷத்தில் பட அப்டேட் கொடுத்த இயக்குனர் நெல்சன் - சினிஉலகம்
மீண்டும் இணைத்த ஜோடி! ரசிகர்களின் மகிழ்ச்சி!
திரைத் துளிகள்
தடுப்பூசி போட்டுக் கொண்ட சூர்யா - ஜோதிகா | Suriya - Jyothika vaccinated
error:
Scroll to Top